Thursday, September 4, 2025

கடவுள்

 



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜாபாலியோட பேச முடிஞ்சுது 


என்னடா சௌக்கியமா ன்னு ஆரமிச்சார் 


கரெக்டா சொல்லு யார் கடவுள் 


எனக்கு தெரிஞ்சவரைக்கும் பரம்பொருள் ஒன்று உண்டென்பார் அதை கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை 


இந்த வெண்டைக்காயெல்லாம் செல்லாது 


சரி சார் நீங்களே சொல்லுங்க 


அப்பிடி வா வழிக்கு - நல்லா யோசி, எல்லா கோயில்லயும் மேல என்ன இருக்கும் 


கலசம் 


இல்ல அதுக்கும் மேல ; அதேதான் கர்ப கிருகத்துலயும் இருக்கும் 


சாமி விக்ராஹமா 


இல்ல 


சரி சார் நீங்களே சொல்லுங்க 


ஏலியன் - கோபுர உச்சியிலேயும், சாமி திருவாசி மேலேயும் இருக்கும் யாளி மாதிரி - அது தான் உண்மையான கடவுள் 


சாமிக்கி மேலே ஒரு உருவம் எதுக்கு அதையும் தாமரை மாதிரி வேலைப்பாடோட விட்டு இருக்கலாம் இல்ல 


சூப்பர் சார் இனிமே சாமிய கூட பாக்காம யாளிய பாக்க கோயிலுக்கு போறேன் - அப்போ அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் தனியா ஏதாவது இருக்கா சார் 


இன்னிக்கு என்னை கிண்டல் பண்றன்னு தெரியுது, இருந்தாலும் சொல்ல வேண்டிய கடமை சொல்லிட்டேன் அப்புறம் மகனே உன் சமத்து 


சற்று கோபத்துடன் போனை கட் செய்தார் 


Sunday, May 1, 2016

ஸ்ரீரங்க ரகஸ்யம்




 ரொம்ப நாள் கழித்து ஜாபாலியுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ரங்க ரகஸ்யம் தெரியுமான்னு கேட்டார்

"எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரங்க ராட்டினம்தான் - ஒருவேளை சிதம்பர ரகஸ்யம் சைவம் என்பதால் யாராவது இப்படி கிளப்பி விட்டு இருப்பாங்க சார்"

ஓகே, ரங்கத்தின் அர்த்தம் என்னன்னு சொல்லு  என்றார்

அவ்வளவு தமிழ் படிக்கல சார்

சுரங்கம்னா தெரியுமா

என்ன சார் tunnel இதுகூட தெரியாதா - மலைகோட்டையிலிருந்து புதுகோட்டைக்கு இருக்கே

சீ அது புதுகோட்டை வரைக்கும் போகல, மலைக்கோட்டை மேலேயிருந்து யானைக்கட்டி 
மண்டபம் வரைக்கும் சறுக்கு மாதிரி சரி அத விடு பகிரங்கம் தெரியுமா

அதான் நடிகை கல்யாணம், ஓட்டுக்கு துட்டு இதெல்லாம் expose பண்றாங்களே

good, ரங்கம் என்றாலே ரகஸ்யம் - ரங்கத்தின் எதிர்மறை அரங்கம், பஹிரங்கம் ; ரங்கத்தொடு ஒத்த சொற்கள் சுரங்கம், சதுரங்கம் புரிஞ்சுதா

ஓகே அப்படின்னா ஸ்ரீரங்கம்தான் ரகஸ்யம்  ரொம்ப புரிஞ்சுது ஆனா என்னன்னுதான் புரியல ; வேணும்னா வேற topic பேசலாமா

இந்த நாய் வாய் வேலை பண்ணாதே  ஸ்ரீ க்கு அர்த்தம் சொல்லு

திரு - என்ன சார் திரு ரகஸ்யம் - ஒன்னும் பெரிசா தெரியல - திருதிரு ன்னு முழிச்சேன்

ஸ்ரீ ன்னா செல்வம்னும் அர்த்தம் இருக்கு தெரியாதா ? எனக்கு நேரமாச்சு அப்புறம் பேசுவோம்

சார், பதில் சொல்லலேன்னா எனக்கு தூக்கம்  வராது  கொஞ்சம் பெரிய மனசு வெச்சு பதிலா சொல்லுங்க

ஓகே - நிதிகள் எவ்வளவுன்னு தெரியுமா

கருணாநிதி, தயாநிதி, ஸ்ரீநிதி, வளர்நிதி, தளர்நிதி

டேய் நிறுத்து என்ன உளர்ற

சாரி சார் எலக்ஷன் நியூஸ் பாத்து சித்த கொழம்பி போச்சு

நவ நிதிகள் - அந்த ஒன்பது நிதிகளும் ப்ராகாரத்துக்கு ஒண்ணா மறைஞ்சிருக்கு

சார் 7 சுத்துதானே இருக்கு

கரெக்ட் - மிச்சம் ரெண்டும் தாயார்கிட்ட இருக்கு - அதனாலதான் பெருமாளே தாயார் பாக்க வரார் - தாயார் எங்கும் புறப்பாடு இல்ல

அப்ப பெருமாள்கிட்ட ஒன்னும் இல்ல - இங்கயும் மதுரை ஆட்சி தானா  ?

அவர் இதற்கும் மேல்பட்ட நிதி -சரி அப்புறம் பேசுவோம் சகதர்மிணி கத்த ஆரம்பிச்சுட்டா

Wednesday, September 2, 2015

சேஷன்

ஆதிசேஷன் புஸ் புஸ்னு மூச்சு விட்டது ; திருமால் என்னப்பா சேதி ன்னார்

பெருமாளே, நானோ கருப்பு இருப்பதோ பாற்கடல் சுமப்பதோ சுடர்திருமேனிஆன   உம்மை
கருடன் இன்று வரும்போது கிண்டல் செய்கிறான் ஒளிரும் பாற்கடலின் திருஷ்டி போட்டு போல் நான் தெரிகிறேனாம்

சரி நான் கருடனை கண்டிக்கிறேன்

இல்லை இல்லை அவன் சொல்வதில் தவறிருப்பதாக தோன்றவில்லை - அதான் என் பேரிலேயே எச்சம் இருக்கிறதே சேஷன் என்று

ஓஹோ அப்படியா உன் பேரை மாற்றிவிடலாமா

மாத்தறதா இருந்தா "இல்லை திருவடி" ன்னு தான் மாத்தணும்

வேண்டுமானால் திருவாலன் என்று சொல்லவா

என் ஏந்தலே ! அடுத்த அவதாரத்தில் எனக்கும் ஒரு வேடம் வேண்டும் - அதுவும் வெள்ளையாக பிறக்கணும்

ராமனுஜராக இலக்குவனாக வாய்த்தது

பாற்கட ல் வந்தபிறகு மீண்டும்  புஸ் புஸ்னு மூச்சு விட்டது

இப்போ என்ன அரவனையே உலகமே போற்றும் உன்னத தம்பி நீதானே

இல்லை பெருமாளே ஒரே கோபிஷ்டன் உலகோடு ஒட்டவில்லை இன்னும் ஒரு முறை ப்ளீஸ் -இந்த முறை நான் அண்ணன், எனக்கு போர்குணம் அறவே கூடாது என்றது அரவம் 

பாலராமராக, பால் வண்ணனாக - கரும் கண்ணனின் அண்ணன்னாக பிறந்து உழவே தலை என்று ஊர்தோறும் உபதேசித்தது
ஒரு வம்புக்கும் போகாமல் ஒதுங்கி வாழ்ந்தது

யுக முடிவில் பாற்கடல் திரும்பியது
இம்முறையும் எதோ இடறியது

கண்ணா - யார் யாருக்கோ அருளுகிறாயே - என்னை பார்த்தால் பாவமாக தெரியவில்லையா

இன்னும் என்ன வேண்டும் சேஷா - என் ஒவ்வொரு அசைவும் நீமட்டுமே உணர முடியும் உனக்கு அருளவில்லை என்றால் என்ன -சொல்லு என்ன வேடம் வேண்டும்

நீ எதுவாக நினைக்கிறாயோ அதை கொடு இல்லை இல்லை எனக்கு ஒன்றும் வேண்டாம் நான் இனி இங்கேயே உன் திருவதன ஒளியிலேயே இருக்க சித்தம்


Wednesday, April 15, 2015

பகவான்

ரொம்ப நாளைக்கப்புறம் எதையாவது   எழுதலாம்னு  யோசிச்சப்போ சாமி, பகவான் தாள்களே என்ற முடிவுடன் ஆரம்பிக்கிறேன் 
இந்த பகவான் யாரு - இது தமிழ் சொல்லா? அப்பிடின்னு நினைக்கும்போது தமிழ் தாத்தாவின் தாத்தா வள்ளுவர் தொடங்கி பகவான் என்றும் ஆதி பகவன் என்றும் கூறுவது கொஞ்சம் மனதுக்கு சந்தோசமா இருந்தது 
சரி தலைப்பு ready, மிச்சம்?
பகவான் பகவான்னு சொல்றங்களே, அது அதிதியின் மைந்தன் "பக" அவரையா அல்லது முக்கண்ணன், நான்முகன் ஐம்படைமால் இதில் ஒருவரையா 
பாக்ய ஸூக்தம் மீண்டும் மீண்டும் பதினைந்து முறை கூறும் பக ஏவ பகவானஸ்து என்பதால் இன்று முதல் மிச்ச கடவுளர்களுக்கு மேல் பகவான் என்று இருப்பதாக வைத்து கொள்ளலாமா ?

இருக்கற கடவுள்களில் இன்னும் ஒன்னு கூட சேத்தா என்ன,   இதுதான் பெருசு, புதுசு ஆனா ரொம்ப பழசு அப்பிடின்னு சொல்லிடலாம்
என்ன ஒரு சௌகரியம் என்றால் தீபாவளி பொங்கல் அனைத்தும் இப்பவும் கொண்டாடலாம் - ஒரு பிரச்சனையும் இல்லை -

புதுசா ரெண்டு மூணு பண்டிகை சேத்து வரும், அதுக்கு ஆமை வடையா ஓட்டை உளுந்து வடையா என்று தெரியனும்.

இதே மாதிரி மத்தவருக்கும் இருந்து விட்டால் எவ்ளோ பிரச்சனை தீர்ந்துவிடும்  (வடை தவிர)
 

Saturday, August 23, 2014

தந்தை-மகன்



ஏழு வயசு என் பையனுக்கு - அப்பா உன்னோட டூ இன்னிக்கு fullaa பேச மாட்டேன் னு சொல்லிட்டான்
சரிதான் போடா என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை - ஏழு வயசில் என்ன ego அப்பப்பா
சுண்டைக்கா பெறா விஷயம் - phone ல விளையாடாதடா போதும்னு சொன்னது ஒரு குத்தமா - இன்னக்கு sunday ஆனாலும் அவனுக்கு swimming உண்டு ரெடி ஆகணும்
சமாதன தூது முதல் சுற்று என் இளைய மகன் மூலம் நடந்தது - இட்ஸ் ஓகே we வில் remind him next time என்று எல்லாம் சொல்லப்பட்டது - இரண்டாம் சுற்று என் மனைவி - டேய் அப்பாதானடா எல்லாம் வாங்கி தரா - அப்பிடி என்ன கோவம் சீக்கிரம் கிளம்பு கிளாசுக்கு late ஆகுது
அப்பா எப்பவும் கரெக்ட் இல்ல

மெதுவாக நான் நுழைந்தேன் - ஏன்டா ராமாயணம் எல்லா என்ன சொல்றது - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திருவள்ளுவர் கூட இதையே என்று சொல்வதற்குள்

அப்பா - epics னா எல்லாமும் இருக்கும் - நீ இராமரை காமிக்கற - ஆனா அதே எபிக்ஸ் தான் துருவனுக்கும் பிரஹல்லாதனுக்கும் இடம் கொடுத்து இருக்கு - அவங்கல்லாம் ஹீரோ ஆனப்போ என் வயசுதான் - அவங்க வில்லனே அவங்கப்பாதான் கரெக்டா ?
ரெண்டு பேரும் அப்பா சொன்னத கேட்டு இருந்தா ஒரு ஸ்டாரும் ஒரு reverse sphinx ம் கிடைச்சிருக்காது
also your last name, think about it - I will be ready in five minutes for my class, lets go