Tuesday, August 19, 2008

College Part II

அதுவும் special tea பார்ட்டின்னா tea, biscuit, அப்புறம் ஒரு cake piece, மசால் வடையும் உண்டு - எப்பவும் அவன்கிட்ட 10 மசால் வடையும் , முழு கேக்கும் stock இருந்துகிட்டே இருக்கும் - அது பழசா போனா கொட்டுவானா இல்ல recycle பண்ணுவானா என்பது அந்த அபயாம்பிகா சமேத மயுரனாதனுக்கே வெளிச்சம்

Sir - லேக்க்ச்சரர்சுக்கும் பசங்களுக்கும் சொல்லீடீங்க - நீங்க ரெண்டு பேரும் பேசினா எங்க எல்லாருக்கும் வாங்கித்தரனும் - அதுவும் ஸ்பெஷல் tea பார்ட்டி

pricipalum okay இப்போ கிளாசுக்கு போங்க அப்பிடின்னு சொல்லி முடித்தவுடன் எல்லார் முகத்திலும் புன்னகை
(இனி மாணவர்கள் இங்கிலிஷில் கதைத்தாலும் தமிழிலேயே தருகிறேன் )

Sir - பேசிட்டீங்க - உடனே எங்களுக்கும் லக்ச்சரர்சுக்கும் spl tea பார்ட்டி "

principal வழிந்தபடி - ok - இன்னைக்கு evening மீட்டிங் ஹால்ல எல்லாருக்கும் சொல்லிடிறேன் - now please go to your classes என்று சொல்லி உள்ளே போனார்.

அன்று முதல் கல்லூரியில் எல்லாரும் வாயை திறக்கவே பயந்தனர்

மனசுக்குள் பேசும்போதும் ஆங்கிலத்தில் பேசினார்.

ப்ரின்சிபலை அடுத்து maths HODயும், geetha டீச்சரும் tea பார்ட்டி கொடுத்தனர்
மேலையூர் ஜமின் சிவகுமாரும், கீழையூர் ஜமின் ராஜ்குமாரும் அதிக பாயிண்ட் எடுப்பதில் ஒரு சாதனையே பண்ணிக்கொண்டு இருந்தார்கள்
நடுவராக இருந்த கிறுக்கு கண்ணதாசன் sir கடைசியில் notice board அருகில் point poard ஒன்று நிறுவி அப்போதைய நிலவரம் print out எடுத்து ஒட்டி இருந்தார்
stock மார்கெட் ஏற்ற இறக்கங்கள் போல் அதை தினமும் காண மாணவ மாணவியர் கும்பல் கூடியது

இந்த ஜுரம் மெல்ல மெல்ல உயர் பட்ட படிப்பாளிகளிடம் இருந்து பட்ட படிப்பு பயில்வோர்கள் மத்தியிலும் பரவியது

அவர்களும் இதை தொடர்ந்தனர் .

BA படிப்பவர்கள் அதிலும் தமிழ், history படிப்பவர்கள் திண்டாடினார்

தமிழ் department லக்சரர்ஸ் அனைவரும்
உடனடியாக இதை நிறுத்த வேணும் எனவும் - வாரத்தில் ஒரு நாள் தமிழிலேயே எல்லா பாடங்களும் நடத்தப்பட வேணும் எனவும் கூக்குரலிட்டு ப்ரின்சிபளிடம் மகஜர் சமர்பித்தனர்

இந்த இடைவேளையில் மீண்டும் ஒரு inter collegiate காம்பெடிஷன் வந்தது -
அதில் மீண்டும் நாங்களே கலந்து கொள்ள கிளம்பினோம் - மீண்டும் seniors வயிறு எரிந்து சாபம் விட கிளம்பினோம் .
இந்த முறை அபார வெற்றியுடன் இரண்டு ரான்னர்ஸ்-அப் கப்பும் ஒரு winner கப்பும் வாங்கி வந்தோம் .
உண்மை என்ன என்றால் - அழைத்து திருபுவனம் college - அவர்கள் போன வருஷம்தான் இந்த கோம்பெடிஷனையே ஆரம்பித்தனர் - பெரிய college எல்லாம் போன வருஷமே இனி வருவதில்லை என்று சபதமிட்டு சென்றனர்
காரணம் - அவர்களுக்கு கொடுத்த ஹாஸ்டல் அறைகள்
போதாதற்கு வந்திருந்த பெண்களை எல்லாம் ஹாஸ்டல் மாணவர்கள் கலைததில் இந்த வருஷம் வெகு சில காலேஜ்களே வந்து இருந்தன - அவற்றை சமாளிக்க எங்கள் ராஜ தந்திரி திருச்சி கிருஷ்ணன் சொல்லிய வழி முறைகளை அப்படியே செய்ததில் வெற்றி கனியை முத்தமிட்டோம்
நெய்வேலி வைத்தி கொஞ்சம் co-operate பண்ணி இருந்தால் இன்னும் ஒரு கப் பிடித்து இருக்கலாம் - நான் அப்படித்தான் , முடிஞ்சா இருக்கேன் இல்லானா கிளம்பறேன் என்று கடைசி நிமிஷத்தில் எடக்கு பண்ணியதால் அவனை வைத்து சமாளிததில் ஒரு வெள்ளி கை நழுவியது



இந்த inter college காம்படிஷன் என்றாலே ஒரு marketing, dumb செராத்ஸ், just a minute என்று இருக்கும் - இதை விட சில college அதிபுத்திசாலிகள் மேலும் சில புது காம்பெடிஷங்களை கண்டுபிடித்து rules form பண்ணி விளக்குவார்கள் - அதில் வெல்லுதல் யார்க்கும் அரிய, எளியவாம் அவர் நண்பர்க்கு; இந்த ஜிகிலாடி வேலையெல்லாம் கிருஷ்ணனுக்கு கை வந்த கலை - கேட்டால் பஞ்ச தந்திர கதை ஒன்றை சொல்வான் - அப்பிடித்தான் இத பிடிக்கணும் என்றும் சொல்வான் - அவன் சொன்ன கதையில் பார்த்தல் எலி , காக்கா , சிங்கம் என்று எல்லாம் மிருகங்களாகவே இருக்கும்
இதில் என்ன தத்துவம் - எப்படி பிடிப்பது என்று அவனுக்கு மட்டுமே தெரியும்
முடிந்ததும் ஒரு விளக்கமும் சொல்வான் - விளங்கியது போல் இருக்கும் - திருப்பி சொல்ல வராது
எப்படியோ நாங்கள் பரிசை தட்டி கொண்டு வந்துவிட்டோம்

காலேஜில் புயல் அடித்தது . அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீள அழைப்பு விடுத்தனர் .இதுக்குள் எப்படியோ ஒரு முது பெரும் அரசியல் கட்சி வீரர்கள் மோப்பம் பிடித்து வந்து விட்டனர் . news பேப்பரில் விஷயம் வெளி வந்தது.
காலேஜ் பேர் கொடி கட்டி பறந்தது ; காலேஜ் trustees எல்லாம் கூடி விவாதித்தனர்

காலேஜ் வாசலில் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது
எங்கள் காலேஜ் வழி தாண்டி போகும் ஒரே பஸ்சும் நிறுத்தி வைக்க பட்டது ; ரெண்டு செங்கல் லாரிகளும் நின்று கொண்டே இருந்தன - அடிக்க alla - அது அந்த பக்கமாக வந்த லாரி என்று தொண்டர்கள் சொல்லிய போதும் எங்கள் principal சற்று பயந்தது என்னமோ உண்மை தான்

இதற்குள் ஒரு சில கட்சி கைத்தடிகள் வேறு சில விஷயங்களையும் மோந்து விட்டனர் .
**சூரியனை அடித்து விரட்டு என்று கோஷம் போட்டனர்
சில மணி துளிகளுக்கு பின்தான் புரிந்தது அவர்கள் கூப்பாடு போட்டது திருச்சி கிருஷ்ணனைதான் என்று .

principal சென்று சமாதானப்படுத்தி அனுப்பி விட்டார் - துணைக்கு NCC மாஸ்டேரும் சென்று அடுத்த வெள்ளிக்குள் இதை சரி செய்வதாக சொல்லி அனுப்பினர் .


தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் கூப்பிட்டு இனி இதுபோல் வெளி ஆட்களெல்லாம் கூடாது - எதுவானாலும் காலேசுக்குள்ளேயே முடிக்கணும் என்று தாளாளர் எச்சரித்தார் .

மாணவர்களுடன் பேச இருப்பதாக சொன்னார் .

அதற்குள் யாரோ போய் அவரிடம் போட்டு விட்டனர் .

நேற்று காலை முதல் கிருஷ்ணன் ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிட வில்லை எனவும் - உண்ணா விரதம் நடத்துகிறான்
ஹாஸ்டல் ரூமை விட்டு வெளியில் வரவில்லை - இன்று காலேஜ் attend பண்ண வில்லை

தாளாளர் விரைந்து நடந்தார் - அவர் கொக்கு போன்ற நடைக்கும் பிரின்சிபால் வாத்து போன்ற நடைக்கும் சரியான போட்டி அன்று .
கண்டவர் அனைவரும் களுக்கென்று சிரித்து அடங்கினர்

தமிழ் ஆசிரியர்களில் சில மித வாதிகள் இருந்தனர் - அவர்களும் ஹாஸ்டல் விரைந்தனர்

எல்லாரும் சென்ற பின்தான் அவர்களுக்கு கிருஷ்ணன் ரூம் எது என்று தெரியாதது விளங்கியது

தாளாளர் வேர்க்க விருவிருக்க - " என்னையா பிரின்சிபால் நீ ?" என்று ஏக வசனத்தில் திட்டினார் .

" கிருஷ்ணா கிருஷ்ணா " என்று ஹாஸ்டல் அதிர கூப்பிட்டார் - கர்ஜித்தார் என்றே சொல்லலாம்

பின்னால் நாலு கால் பாய்ச்சலில் வந்த ஹாஸ்டல் warden - "சார் " என்று வேகமாக ஓடி வந்தார்

" கிருஷ்ணன் ரூம் 103 சார் " - என்றார் -
எப்போதோ திறந்து வைத்த ஹாஸ்டலில் ரூம் எப்படியிருக்கும் என்று கூட மறந்து போன நிலையில் அவரை - " ஹ்ம்ம் முன்னாடி போயேன்யா"
என்று அதட்டியபடி பின் தொடர்ந்தனர் .

எல்லாருக்கும் மூச்சு வாங்க மாடி ஏறி கதவை தட்டினார் . கதவு திறந்தே இருந்தது
உள்ளே கிருஷ்ணன் தூங்கி கொண்டு இருந்தான் .
warden அவசரமாக ரெண்டு செல்ல தட்டு தட்டி எழுப்ப முயன்றார்

யோவ் - பாத்துயா - செத்து கித்து போய்ட போறான் - காலேஜ் பேர் கெட்டு போய்டும்

எப்பா கிருஷ்ணா -

அவன் மெதுவாக கண் விழித்து பார்த்தன் - அதற்குள் அவன் ஹாச்டல்மேட் விக்கி எனும் வெங்கட் உள்ளே நுழைந்து - "சார் அவனுக்கு ..." என்று ஆரம்பித்தான் - warden முந்திக்கொண்டு -
"எல்லாம் தெரியும் எண்டா நீ அவன் ரூம் மேட் தானே - அவன் உண்ணா விரதம் இருகறான்னு ரிப்போர்ட் பண்ண வேண்டியதானே
இப்ப செத்து கித்து போயட்டன்னா யார் பாக்கறது "


"இல்ல சார் அது வந்து - அவன் விரதம் எல்லாம் இல்ல சார் "

அதற்குள் தாளாளர் பொறுமை இழந்தவராக -" டேய் - உங்க சண்டையெல்லாம் அப்புறம் - போய் உடனே என்னோட jeep எடுத்து வந்து இவன ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போக ஏற்ர்பாடு பண்ணுங்க - townல dr. சூர்யா நாராயணன் ஹாஸ்பிடல் போங்க நான் போன் பண்ணி சொல்லிட்டு வரேன் "

கிருஷ்ணனை நாலு பேராக தூக்க முயற்சித்தனர்
அவன் ஈன ஸ்வரத்தில் - " அதெல்லாம் வேண்டாம் சர் - எனக்கு ரெண்டே நாளில் சரியாகிடும் என்று முனகினான் "

"எல்லாம் எங்களுக்கு தெரியும் - நீ சத்தம் போடாம வா "

அவனை ஜீப்பில் ஏத்தியும் பிரின்சிபால் ஏறிக்கொண்டு -
" NCC சாரையும் வரச்சொல்லு"
- என்றார் - அவர் பயம் அவருக்கு - NCC சாருக்கு நல்ல உடல் கட்டு - துணைக்கு சரியான கடோத்கஜன் .

விக்கி அருகில் இருந்த சினிமா சின்னானிடன் க்ளாசில் சொல்ல சொன்னான் .

அவன் சென்று எல்லாரையும் உசுப்பி விட்டான் - "டேய் கிருஷ்ணனை - உடம்பு சரியில்லாத இருந்தா கூட முடியாதுன்னு சார் எல்லாம் சேந்து தூக்கிகிட்டு போய் திருச்சியில் விட்டுட போறாங்களாம் - நமக்கு எவ்ளோ help பண்ணியிருப்பான் - அவன போய் இப்படி செய்றாங்க - வாங்க நாம போய் தடுப்போம் " -

" உனக்கு யார்ரா சொன்னது "
"விக்கிதான் - அவனும் கூட துணைக்கு ஜீப்ல போறான் "

மாணவர்கள் அனைவரும் கிளாசில் இருந்து வெளியே கிளம்பினர் - தாளாளர் பைக்கிலும் princi ஜீப்பிலும் கிளம்பி விட்ட படியால் மற்ற ஆசிரியர்கள் அவரவர் departmentல் கதை அளந்த படி இருந்தனர்

திடீரென்று ஒரு குரல்
"கிருஷ்ணனை பலி கடா ஆக்கின பிரின்சிபால் ஒழிக "
மாணவர்களை சீன்டாதே - மண்டியிட்டு மன்னிப்பு கேள்

வேண்டும் வேண்டும் கிருஷ்ணன் வேண்டும்
college ஸ்டிரைக்

என்று பல கோஷங்கள் - பல தட்டிகள்
எல்லா மாணவர்களும் cycle stand அருகில் இருந்தனர் .

வயதில் மூத்தவர் என்பதால் vice princi என்று தமிழ் தாத்தா என்று செல்லமாக அழைக்கும் சுவாமிநாதன் அவர்கள் முன் நின்றார்

அங்கே ஜீப்பில் சென்றுகொண்டு இருந்தபோது தான் விக்கி மீண்டும் விளக்க அனைவருக்கும் உண்மை புரிந்தது
கிருஷ்ணனுக்கு வயத்துவலி - doctor ரெண்டு நாள் liquidஆ குடிக்க சொல்லி இருக்கார் அதனால மோர் குடித்துக்கொண்டு இருக்கான்
யாரோ உண்ணா விரதம் என்று கிளப்பி விட்டு இருக்காங்கள்

இதற்குள் ஜீப்பில் இருந்து கிருஷ்ணன் இறங்கி சற்று ஒதுக்குபுறமாக சென்று அவசர இயற்க்கை உபாதையை கழித்தான் - driver தன்னிடம் இருந்த pepsi போத்தலில் தண்ணீர் ரொப்பி குடுத்தான் .

எல்லாம் முடிந்து கிருஷ்ணன் ரோடை cross பண்ணுகையில் வேகமாக வந்த திருப்பத்தில் வந்த செங்கல் லாரி கிருஷ்ணனை மோதியது

மோதிய லாரி ஒரு கணத்தில் போயே போய் விட்டது .

அதற்குப்பின் 6 மாதம் neuro physician இடம் நடையாய் நடந்து சுய நினைவு பெற்று காலேஜில் மீண்டும் சேர்ந்து mca முடித்தான்
அவன் அப்பாவும் ஹாஸ்டலில் leave போட்டு கூடவே இருந்தார் .

எல்லாரும் இது accident என்று தான் சொல்கிறார்கள்

வெகு நாட்களுக்கு பின் இப்போ கிருஷ்ணனை நியுயார்க்கில் சந்தித்தேன் - கல்யாணமாகி குழந்தையுடன் இருப்பதாகவும் இங்கு 6 மாசத்தில் project முடியுமென்றும் சொன்னான்

"என்னாடா இப்போ என்ன பண்ற - இன்னும் அதே மாதிரியா இல்ல நல்ல பிள்ளையா " என்றேன்

"டேய் - அதெல்லாம் ரத்தத்துல கலந்ததுடா - இப்போகூட ஒரு blog எழுதி இருக்கேன், எப்படி வேணா நடக்கட்டும் - at least நம்மால இறப்பவர்களை காப்பாத்த முடியுமான அதுவே போதும்

http://industan.blogspot.com/


முடிந்தால் நீங்களும் பாருங்களேன்