வரவு எட்டணா செலவு பத்தணா என்று ஒரு பாட்டு பாமா விஜயம் படத்தில்.
பழைய படம் என்றாலும் பதிந்த படஞ்களில் ஒன்று
ஒரு கூட்டு குடும்பம் - காசு மோகத்தினால் திசைக்கொரு பிள்ளை என சென்று கடன் பட்டு தந்தையின் சீரிய முயற்சியில் சுபமே முடியும் படம் - கதையின் போக்கு வெகு விரைவில் தெரிந்தும் மக்களை கட்டி போட்ட திரை அம்சம்.
வரவுக்கு மேலே செலவு செய்தால் வினை என்று தெளிய வைக்க இயக்குனர் முயன்று வெற்றி பெற்றார்.
30 - 40 வருடங்களுக்கு பிறகு இங்கேயும் கிட்டத்தட்ட அதே - தலைக்கு மேலே போகுமா, போய் விட்டதா என்று தெரிய வில்லை - தந்தை பாலையா மாதிரி ஒபாமா வந்துள்ளார் - போக போக தெரியும், இந்த பூவின் வாசம் புரியும்
தொடரும் ....