Sunday, May 24, 2009

Motherhood - தாய்மை

திருவானைக்காவலுக்கு அருகில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு - தாய், கடவுளை விட பெரிய வரமாய் தோன்றும்

மனதில் பதிந்த வரலாறு - திரு ஆனைக்கா வில் யானையும் சிலந்தியும் அடுத்த பிறவியில் அரசர்களாய் பிறந்தனவாம்

சிலந்தி தான் செங்கணான் - கோ செங்கணான் ஆக பிறந்தான் - அதனால்தான் அவன் கட்டிய எல்லா சிவ ஆலயங்களும் யானை ஏற இயலா வண்ணம் இருந்ததாம்

செங்கணான் தாய் - ராணி கமலவதி தில்லை ஈசனை அனுதினமும் மன்றாடி வேண்டி ஆண் மகவு ஈன்றாள் - ராஜா சுபதேவரின் அரண்மனை ஜோசியர் சொன்ன நேரம் மகன் பிறந்தால் உலகாளுவான், சைவ தொண்டு நிலைத்து நிற்க செய்வான் என்று இருப்பதால் - வலியெடுத்த கமலவதி - காலில் கயிறு கட்டி தலைகீழாக தொங்கினாள் -முகூர்த்த நேரம் வந்ததும் கீழ் இறக்கி வைத்து மறைந்தாள்.

அதே போல் கோச்செங்கனான் உலகாண்டான்

இதோ இக்கால தாயும் ஈனும் மகவுக்கு பிணி வராமல் காக்க என்ன என்ன துறக்கிறாள்

Monday, May 11, 2009

தேறுதல்

வழக்கம்போல் ஞாயிறு மதியம் library போய் மூழ்கி முத்து எடுத்து கிளம்பும்போது மனையாளிடம் தொலைபேசினேன்


என்னடீ சமையல் இன்னக்கீ?


காங்கிரஸ் கறி ;

PMK சாம்பார் ;

ஜனதா ரசம்

ADMK கூட்டு

BJP வத்த குழம்பு

DMDK salad

கம் யு னிஸ்ட் பாயசம்


சீக்கிரம் வாங்க - வத்த குழம்பு சுண்டிடும் போல இருக்கு அடுப்ப பாக்கணும்


போனை வைத்து விட்டாள்


எனக்கு தலை சுத்தியது

இன்னும் ஒரு மொடக்கு குளிர்ந்த நீரை குடித்தேன்

மீண்டும் நூலக வாசிப்பறையில் சென்று அமர்ந்தேன்

ஒரு வேளை - ச்சே ச்சே அப்பிடி எல்லாம் இருக்க கூடாது


ஒரு வாரமாகவே எங்கள் வீட்டில் எலெக்ஷன் பேச்சே தொனிக்கிறது

ஊர் விட்டு ஊர் ( கண்டம் விட்டு கண்டம் ? ) வந்தாலும் postal vote எப்படி போடலாம் - அதற்கு என்ன ஜெராக்ஸ் வைத்தால் தேர்வாணையர் ஒப்பு கொள்வார் என்று அதையே பேசிய வண்ணம் இருந்தாள்


இதுதான் அவளுக்கு மூன்றாம் எலெக்ஷன் - (வோட்டு போட)

வோட்டு போடாவிட்டால் ஏழு ஜென்ம பாபம் துரத்தும் என்பது போலும், எப்போதோ அவள் ஊர் அருகில் நடந்த பஞ்சாயத்து எலெக்ஷனில் இரண்டு வேட்பாளர்களும் சம வோட்டு வாங்கியதால் சீட்டு குலுக்கி தேர்ந்து எடுத்ததும், அவள் பெரிய தாத்தா அவளிடம் கதை சொல்லி postal vote முக்கியத்துவத்தை பசுமரத்தாணி போல் பதித்து பர லோகம் போய் சேர்ந்தார்


தன் கடமையை செய்ய முடியாமல் போனால் பழி விழுமே என்று தூக்கத்தில் கூட வோட்டு வோட்டு என்று புலம்பியபடி இருந்தாள் - சரி - எலெக்ஷன் முடிந்ததும் சரியாகிவிடும் என்று நானும் அப்படியே விட்டு விட்டேன்


இங்கு ஸ்டாம்ப் விலை ஏறுவதால் $௨௦க்கு ஸ்டாம்ப் வாங்கி வைத்து இருந்தேன்


அத்தனையும் நேற்று எலெக்ஷன் கமிஷனர் அலுவலகத்துக்கு லெட்டர் எடுத்து செல்ல உபயோகப்பட்டது என்று சொன்னபோதும் சரி நாமும் நல்ல வாக்காளராக இருக்க வழி சொல்கிறாளே என்று சும்மா இருந்து விட்டேன்


தினமும் அவள் நிவாரண யோகா க்ளாசுக்கு போய் வருவது வழக்கம் - யாரோ கொபெர்டன் கலேலி சொல்லி தருகிறாராம் - அந்த அம்மாவுக்கு 60 வயசுக்கு மேல் இருக்கும்


நேற்று திடீரென உச்சி பொழுதில் குடை எடுக்காமல் கிட்டத்தட்ட கம்பளி போன்ற புடவையில் வாக்கிங் போகிறேன் என்றால் - என்னடி இது கோலம் என்றதற்கு -


அதெல்லாம் யோகா - உங்களுக்கு தெரியாது - வெய்யில் சுட சுட வேர்க்க வேர்க்க நடந்தால் உடல் கொழுப்பு வழிந்து ஓடும் - சூரியனே கொழுப்புக்கு எதிரி

நீங்களும் வரீங்களா


ச்சே ச்ச எனக்கு இதில் எல்லாம் உடன்பாடு இல்லை - ஆப்பகாரிகிட்ட மாவு வாங்கறமாதிரி ஜெர்மன் காரிக்கிட்ட போய் கத்துகறதா - என்னமோ செய்


நேற்று இரவு அவளது ஓயாத இ மெயிலுக்கு தேர்தல் தொடர்பு அலுவலகம் - இனி இதுபோல் spam அனுப்பினால் தக்க நடவடிக்கை என்று மட்டும் பதில் வந்தது


இன்று நான் இந்தபக்கம் நூலகம் வந்ததும் அவளும் ஞாயிறு போற்ற வெய்யிலில் நடந்திருப்பாள் - வோட்டு போட முடியலையே என்ற கவலை வேறு


எல்லாம் சேர்ந்து ஒரு வேளை - ச்சே ச்சே

எதற்கும் விரைந்து வீட்டுக்கு செல்லலாம் என்று

கார் சாவி எடுத்து முடிக்கினேன் - வரும் வழியில் பால் மலிவாக கிடைக்கிறதே என்று நிறுத்தி வாங்கி, அருகில் இருந்த பாப் காரன் microwaveable என்று பார்த்தவுடன் அதையும் வாங்கி அள்ளி போட்டுகொண்டு வீடு வந்து பார்த்தால் மூக்கை துளைக்கும் மணம்



என்னடீ என்ன பண்ற ? எல்லாம் ஆச்சா? என்றபடியே அவள் முகத்தை பார்த்தால் -


ஏய் - என்ன ஆச்சு - என்ன இது முகமெல்லாம் கருப்பு படிஞ்சு போய் - என்ன பண்ணினே


ஒரு தீஞ்ச வாசம் இப்போதான் தெரியுது


இன்னைக்கும் வாக்கிங் போனியா?

ஆமாம் - அதுல செத்த முகம் கருத்து போச்சு

என்ன சமையல்னு கேட்டப்போ எதோ உளறிநியே


ஒ அதுவா


காங்கிரஸ் கறி ; அதாவது carrot, முட்டை கோஸு, பீன்ஸ் கறி - பச்ச வெள்ளை சேப்பு


PMK சாம்பார் ; அதாவது மாம்பழ சாம்பார்


ஜனதா ரசம் அதாவது கொட்டு ரசம் - மலிவு ரசம்


ADMK கூட்டு பீட்ரூட், பெரிய கத்தரி ஓவன்ல பொசுக்கி சேத்து இருக்கேன் தேங்காய் தக்காளி கூட்டு - கருப்பு வெள்ளை சேப்பு


BJP வத்த குழம்பு - பச்ச மொளகாய் வத்த குழம்பு - பச்ச சேப்பு


DMDK ஸலட் அதாவது வெள்ளரி, jalepeno pepper, (yellow) banana pepper, tomato, lettuce

மஞ்சள் கருப்பு சேப்பு தீப்பந்தம் (மொளகா)


இதெல்லாம் சரி - அதென்ன கம்யுனிஸ்ட் பாயசம்? என்ன அருவா சுத்தி எல்லாம் வெச்சு சாப்பிடனுமோ?


ச்சே ச்சே அப்பிடி இல்லை - "ஜவ்வு" அரிசி பாயசம் - கப்பில வரும் ஆனா வராது - அதான் தோழர்களின் பாயசம்


ஆங் ! சொல்ல மறந்துட்டேனே - நம்ம வோட்டு எல்லாம் போட இங்க கான்சுலேட் ஜெனரலுக்கு எழுதி போட்டா போதுமாம் - சொன்னாங்க


சரி வாங்க சாப்பிடலாம் - ரொம்ப பசிக்குது


ஆமாம் எனக்கும்தான் என்றபடி தட்டுடன் அமர்ந்தேன்