இந்த
விலைவாசி விஷத்தவிட வேகமா
ஏறுதே, டாலர்
போற போக்குல சதமடிக்குமொன்னு
தோணுதே - என்னதான்
நடக்குது நம்மூர்ல?
நம்மள
மாதிரி சாமானியர்களால எதுவுமே
பண்ண முடியாதா -
இந்த நெலமை
மாற ஏதாவது பரிகாரமே இல்லையா?
இப்படி நானும்
எனது நண்பரும் பேசிக்கொண்டே
இருக்கும்போது அவன் அம்மா
(இந்தியாவிலிருந்து
தற்போதைய இறக்குமதியை கவனிக்க
வந்தவர்) -
நான்
சொல்றேன்னு நெனசுகாதீங்கோ,
இங்க வந்தோமா
நெறையா சம்பாதிச்சோமா ஊர்
சுத்திநோமா அப்படின்னு இல்லாம
எதுக்கு ஊர் வம்பு -
எதோ நெறைய
ரூபா கிடச்சா ஊரோரம் கழனி
காடு வாங்கறதா விட்டுட்டு
எங்காத்து புள்ளயாண்டனையும்
ஏன் இழுக்கணும் அப்படின்னு
ரொம்ப கோவமா பேசினா (சாபமோ?!...
)
சரி
எதுக்கு வம்புன்னு நானும்
அவனும் தெருவில நின்னே பேசினோம்
தூக்கம்
கண்ணை சுத்த அப்படியே பை bye
சொல்லிவிட்டு
வந்து படுத்துவிட்டேன் -
ஜெட் லாக்
வேறு அழுத்திவிட்டது
கனவில்
சுப்பா ராவும் அப்பா ராவும்
தலையில் முண்டாசு கட்டிய
சிங்கும் பாரதியும் என்று
குழப்பமாக அனைவரும் வந்தனர்
த்யாகராஜ பாகவதர் வந்து ராம
நாமம் சொல்ல சொன்னார் பாராதி
வந்து தெலுங்கானா எப்படி
before 1956
demerger கேட்கிறார்களோ
அப்படி நாட்டை 1991
க்கு முன்
உள்ளபடி மாற்றி சட்டம் அமைக்க
சொன்னார்
கடைசியில்
ஔவை பாட்டி வந்து -
எல்லாம்
பெருமாள் பாத்துக்குவார் ,
அவர்கிட்ட
பொய் சிங்கும் பங்கும் நிக்க
சொல்லு என்றாள் -
யார் பங்கு
என்றபோது அதான் பங்குகுளின்
தந்தைபோல் சந்தையை மட்டும்
காப்பாற்றுகிறவர் என்று
சொல்லி மறைந்தாள்
நேரே
பெருமாள்கிட்டே போனேன் -
வழியிலே பஸ்
போகாம ஸ்ட்ரைக் -
நடந்தே போனேன்
- உங்கள
விட்டா வேறு வழியில்லை -
ஏதாவது பண்ணுங்க
- இந்த
நாடு சீர் கெடக்கூடாது -
எதோ அசுரன்
உசுரு மாதிரி ஏழு மலை தாண்டி
உள்ள நின்னுக்கிட்டு இருக்கீங்களே
அவர்
சிரித்தபடி - எனக்கு
சக்கரவர்த்தி வட்டி தந்தா
ஒரே நொடியிலே நிலைமை சரியாகிடும்னார்
வேர்த்து
விருவிருத்து எழுந்தேன் -
கனவு
ஆனால்
வழி காட்டிவிட்டார்