Saturday, August 23, 2014

தந்தை-மகன்



ஏழு வயசு என் பையனுக்கு - அப்பா உன்னோட டூ இன்னிக்கு fullaa பேச மாட்டேன் னு சொல்லிட்டான்
சரிதான் போடா என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை - ஏழு வயசில் என்ன ego அப்பப்பா
சுண்டைக்கா பெறா விஷயம் - phone ல விளையாடாதடா போதும்னு சொன்னது ஒரு குத்தமா - இன்னக்கு sunday ஆனாலும் அவனுக்கு swimming உண்டு ரெடி ஆகணும்
சமாதன தூது முதல் சுற்று என் இளைய மகன் மூலம் நடந்தது - இட்ஸ் ஓகே we வில் remind him next time என்று எல்லாம் சொல்லப்பட்டது - இரண்டாம் சுற்று என் மனைவி - டேய் அப்பாதானடா எல்லாம் வாங்கி தரா - அப்பிடி என்ன கோவம் சீக்கிரம் கிளம்பு கிளாசுக்கு late ஆகுது
அப்பா எப்பவும் கரெக்ட் இல்ல

மெதுவாக நான் நுழைந்தேன் - ஏன்டா ராமாயணம் எல்லா என்ன சொல்றது - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திருவள்ளுவர் கூட இதையே என்று சொல்வதற்குள்

அப்பா - epics னா எல்லாமும் இருக்கும் - நீ இராமரை காமிக்கற - ஆனா அதே எபிக்ஸ் தான் துருவனுக்கும் பிரஹல்லாதனுக்கும் இடம் கொடுத்து இருக்கு - அவங்கல்லாம் ஹீரோ ஆனப்போ என் வயசுதான் - அவங்க வில்லனே அவங்கப்பாதான் கரெக்டா ?
ரெண்டு பேரும் அப்பா சொன்னத கேட்டு இருந்தா ஒரு ஸ்டாரும் ஒரு reverse sphinx ம் கிடைச்சிருக்காது
also your last name, think about it - I will be ready in five minutes for my class, lets go

Friday, June 20, 2014

Fullஆ Halfஆ

ஏண்டீ Fullஆ Halfஆ

ஹும் small, எதுக்கும் கொஞ்சம் யோசிங்க, இவ்ளோ நாள் இல்லாமல் இப்ப என்ன திடீர்னு - மனசுக்குள்ள பெரிய **காரன்னு நெனைப்பு. எனக்கு நம்பிக்கை இல்லை;

எனக்கு இதெல்லாம் சின்ன வயசுலேயே பழக்கம்டீ - எனக்கு பன்னெண்டு 13 வயசு இருக்கும், அப்பத்தான் நாங்க செங்குளம் காலனி போனோம். தீவாளி சமயம், செம demand. ஸ்கூல் வேற லீவ். கட்டிங் எல்லாம் போட்டு இருக்கேன்

இது அண்ணா அப்பாவுக்கு  தெரிஞ்சா   அவங்களுக்கு எப்படி இருக்கும் ?

அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்; அம்மாவுக்கு அரசல் புரசலா தெரியும் - இப்ப இந்த சிவா பய வேற ஏதாவது உளறி இருப்பான் ; சமாளிப்போம்

நமக்கு ஏன் இப்புடி புத்தி போவுது அப்படின்னு நெனைச்சு பாருங்க - அடுத்த வாரம் ஆபீஸ் வேலையா வெளியூர் போகணும்னு வேற சொன்னீங்க - உங்களுக்கு இந்த வயசுல இந்த நேரத்துல இந்த வேலை தேவைதானா?

இங்க வந்ததுலே இருந்து எல்லா வேலையும் வெள்ளைக்காரன் மாதிரி நமக்கு நாமே செஞ்சுக்குறோம் இல்ல - இத மட்டும் ஏன் விட்டு வைக்கணும்

எப்பிடியோ போங்க - ஆனா பத்து மணிக்கு மேல ஒன்னும் சத்தம் கித்தம் வர கூடாது - அப்புறம் தொள்ளாயிரத்து பத்தும் ஒன்னும் கீழ் வீட்டுக்காரன் கூப்பிடுடுவான்

ஆமாண்டி எனக்கும் பயமாத்தான் இருக்கு - இதுவேற கிறுகிறுங்குது - கரெக்டா பத்து மணி வரைக்கும் தச்சுட்டு தையல் மிஷினை ஆப் பண்ணிடலாம். இந்த டிரெஸ்ஸ போட்டு பாரு - மிச்ச பைபிங் நாளைக்கு கலையில்,  வீட்டுல தையல் மிஷின்  வாங்கி வெச்சு  ரொம்ப நாளாச்சு; சரி இவளுக்கு ஒரு சுடிதார் தைக்கலாம்னு உக்காந்தது தப்பா போச்சே !...



இந்த தையல் மிஷினை வாங்கவும் வேண்டாம் இப்பிடி போட்டு என்ன படுத்தவும் வேண்டாம் என்னமோ பண்ணுங்கோ, சுடிதார் ஆனா சூப்பரா இருக்கு