Thursday, September 4, 2025

கடவுள்

 



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜாபாலியோட பேச முடிஞ்சுது 


என்னடா சௌக்கியமா ன்னு ஆரமிச்சார் 


கரெக்டா சொல்லு யார் கடவுள் 


எனக்கு தெரிஞ்சவரைக்கும் பரம்பொருள் ஒன்று உண்டென்பார் அதை கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை 


இந்த வெண்டைக்காயெல்லாம் செல்லாது 


சரி சார் நீங்களே சொல்லுங்க 


அப்பிடி வா வழிக்கு - நல்லா யோசி, எல்லா கோயில்லயும் மேல என்ன இருக்கும் 


கலசம் 


இல்ல அதுக்கும் மேல ; அதேதான் கர்ப கிருகத்துலயும் இருக்கும் 


சாமி விக்ராஹமா 


இல்ல 


சரி சார் நீங்களே சொல்லுங்க 


ஏலியன் - கோபுர உச்சியிலேயும், சாமி திருவாசி மேலேயும் இருக்கும் யாளி மாதிரி - அது தான் உண்மையான கடவுள் 


சாமிக்கி மேலே ஒரு உருவம் எதுக்கு அதையும் தாமரை மாதிரி வேலைப்பாடோட விட்டு இருக்கலாம் இல்ல 


சூப்பர் சார் இனிமே சாமிய கூட பாக்காம யாளிய பாக்க கோயிலுக்கு போறேன் - அப்போ அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் தனியா ஏதாவது இருக்கா சார் 


இன்னிக்கு என்னை கிண்டல் பண்றன்னு தெரியுது, இருந்தாலும் சொல்ல வேண்டிய கடமை சொல்லிட்டேன் அப்புறம் மகனே உன் சமத்து 


சற்று கோபத்துடன் போனை கட் செய்தார்