Sunday, June 8, 2008

college part I

If you use Internet Explorer 6+ in Windows Vista/XP/2000, you should have no problems in viewing and editing Tamil text correctly. Mozilla Firefox requires support for complex text layout, otherwise it might display the Tamil text incorrectly. The support for complex text layout is usually turned off by default, but this Wikipedia article gives a detailed explanation on how to turn it on in various operating systems

காலேஜ் டைம்ல எல்லாருக்கும் இருக்கற ஒரு "வீரம்" எங்களுக்கும் இருந்தது
பம்பனாதபுரம் வகையறா charities காலேஜ் என்று அழகிய பெயர் கொண்ட Mayuram pvc கலேஜ்லதான் நான் mca படிச்சேன்

கிராமத்து college - நானோ சென்னையில் இருந்து போய் ஹோஸ்டேள்ள தங்கி இருந்தேன்
first இயர்லியே seniors எல்லாம் எதுத்துக்கிட்டு inter college காம்பெடிஷன் போனோம்
அங்க எல்லாத்துலேயும் நாங்கதான் last - ஒரு சின்ன காபி கப் கூட கிடக்காம வந்தோம்

எங்க எல்லாரையும் principal, எங்க hod கூப்பிட்டு நலம் விசாரிச்சாங்க.
உடனே வீரத்தோட நான் முன்னேறி - சார் - இந்த காலேஜ்ல நாங்கெல்லாம் "professional" கோர்ஸ் படிக்கிறோம் ஆனா எல்லாரும் தமிழ்லதான் பேசறோம். ஒரு extra curricular ஆச்டிவிடிசும் இல்ல - அப்புறம் எப்பிடி திடீர்னு அங்க போனா மட்டும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்
உடனே எங்க HOD யும் ஒத்து ஊதினார்
ஞாயம்தான் நீங்க சொல்றதும் கரெக்ட், இனிமே காலேஜ் ஹவுர்ஸ்ல post graduates எல்லாரும் கட்டாயமா english பேசணும் - எக்ஸ்ட்ரா curricular activities குரூப் form பண்ணி monthly progress காட்டுங்க என்று சொல்லி தன் வேலையை காத்துகொண்டார்
ப்ரின்சிபளும்
"ok - let us do this - but next month ஒண்ணாந்தேதி பிரக்ராஸ் காமிங்க, இப்போ கிளாசுக்கு போங்க"
பேசாமல் இருந்து இருக்கலாம், குசும்பு கும்பகோனத்தான் உடனே
"பாத்தீங்களா சார் - நீங்களே பேசல்லேன்னா அப்புறம் எங்களுக்கு inspiration எப்படி வரும்?
இனிமே வாத்யார் யாராவது ப்ரோஃபெஷனல்லா பேசல்லேன்னா கிளாஸபுல்லா எல்லாருக்கும் tea party வெக்கணும், சர்குலர் விட்டுடுங்க அப்பத்தான் எல்லாரும் கண் கொத்தி பாம்பா இருப்பாங்க "

"ok - பசங்க பேசல்லேன்னா - we will award points - யார் maximum points ஒரு செமேச்டேர்ல வாங்கி இருக்காங்களோ அவங்க அந்த department லக்சுரர்சுக்கு tea party வெக்கணும்" அப்படின்னு HOD சொன்னார் - அவருக்கு canteen டீ ரொம்ப புடிக்கும்

மேற்கொண்டு தொடரும் முன் இந்த tea party அப்படிங்கறத விளக்கியே ஆகணும்
எங்க கான்டீன்ல சூடா ஒரு டீயும் உள்ளங்கை அகல உப்பு பிஸ்கட்டும் சேத்து எடுத்து குடுத்தா அதான் tea party

ஆனா இந்த விழாவுக்கு canteen ராமுகிட்ட காலையிலேயே சொல்லி வெக்கணும் அப்போதான், முக்கியமா எத்தனை டீ அப்பிடிங்கறதா கரெக்டா சொல்லணும்
அவன் அதுக்கு அப்புறம்தான் செய்ய ஆரம்பிப்பான்

No comments: