என் மகனுக்கு தூங்கும் முன் என்னிடம் கதை கேட்டால் தான் தூக்கம் வரும்.
மனையாள் வசனமும் கூடவே வரும் "மனுஷன் பேசினா எல்லாருக்கும் தூக்கம் தான் வருது"
இருப்பினும் எனது துக்க கால கதையெல்லாம் தூக்க கால கதையாக சொல்லுவேன்
சிறு வயது முதலே "கதை விட" வரும் என்பதால் ஏதாவது சொல்லி சமாளிப்பேன்
அன்று அப்படிதான் கடவுளர், தேவர், அசுரர் பற்றி சொன்னேன்
தேவர்கள் கண் துஞ்சார், பசி இல்லார், இமை இல்லார், உணர்ச்சி இல்லாதவர்கள் ; நரை திரை இல்லாதவர், குறிப்பிட்ட காலம் வரை சாவு இல்லாதவர் - எப்போதும் முப்பத்து முக்கோடி - தேவர் தொகையில் பெருக்கம் family planning போன்ற விஷயங்கள் இல்லை ; கடவுள் தேவர்களை படைத்து - மனிதர்கள் தேவர்களுக்கு அவி கொடுப்பார் ; தேவர்கள் மானிடர்களுக்கு வரம் கொடுப்பார் - இருவரும் இணைந்து வாழ்வார் - symbiotic life
அசுரர்கள் என்பவர் ராக்ஷசர்கள் - நம்மை எல்லாம் ரக்ஷிப்பவர்கள் - அதே சமயம் இறை தேடாதவர் - நாம் இறை தேடும் சமயம் மட்டும் ஆகமார்தந்து தேவனாம் "கமனார்தந்து ரக்ஷஷாம்" என்று அவர்களுக்கு விடை கொடுத்து விடுவோம் - பின்னர் திக்விமோக சொல்லி அழைப்போம்
இப்படி மனம் போன போக்கிலே பேசினேன்
இணைவி இடிபோல் இடித்து - என்ன உங்க கிறுக்கு புத்தியை எல்லாம் அவனுக்கு கொடுக்க எண்ணமோ? வேற கதை மாத்துங்க - என்றாள்
சரி - தற்கால , எதிர்கால கதை ஒன்னு சொல்றேன் அப்பிடின்னு -
மகனே, எதிர்காலத்துலே எல்லாம் இயந்திர மயம் அப்பிடின்னு சொல்றாங்க; robot அப்பிடின்னு சொல்ற இயந்திர மனிதர்கள் நமக்காக காத்து இருப்பார்கள் - அவர்களுக்கு நாம் பவர் தருவோம் ; அவர்கள் நமக்கு குற்றேவல் செய்வர் ; சொன்னது கேப்பார் ; அதற்கு உயிர் கிடையாது - அதனால் வலி தெரியாது; தூங்காது; வயசானால் ரிப்பேர் செய்தால் புதுசாகிடும் ; ஆஸ்தி மாதிரி தாத்தா ரோபோ பேரனுக்கு என்று வம்ச வம்சமாக வரும்
என் பையன் கேட்டான் - ஏம்பா அப்பா தேவர்கள் தான் ரோபோவா? ரெண்டு கதையும் ஒரே மாதிரி இருக்கே - ரெண்டு பேருக்கும் நரை, திரை, பசி, வலி, உயிர், உணர்ச்சி கிடயாதுங்க்றே; ரெண்டு பேரும் மனிதர்களுக்கு நன்மை செய்ய பிறந்தவர்கள் அப்பிடின்னு சொல்றே - உருவாக்கப்பட்டவர்கள் அப்பிடின்னும் சொல்றே ; ரெண்டு பேருக்கும் மனிதர்கள் உதவி வேணும் இல்லன்னா இருக்க முடியாதுன்னும் சொல்றே
என் மனதில் பெருமிதம் ததும்பியது - என் மகன் என்னைவிட புத்திசாலி ; கற்பூரம்
திடீரென்று இடி மீண்டும் இடித்தது "இப்பிடி எதையாவது தத்து பித்துன்னு நீங்க சொல்லி வெக்க போய் அவன் நாளக்கி ஸ்கூலிலும் இத சொல்லுவான், எல்லாம் கை கொட்டி சிரிக்கும், பேசாம தூங்குங்க - ஒழுங்கா சின்ன குழந்த கதை ஒன்னு சொல்ல தெரில ! இதுலே கதை எழுத்தாளர்னு வேற சொல்லிக்க வேண்டியது - இருக்கற கதைய சொல்ல வருதான்னு பாருங்க - அப்புறம் புதுசா கதை புனையலாம், அப்பா சொன்னதெல்லாம் மறந்துட்டு சாமிகிட்டே போய் விபூதி எட்டுண்டு தூங்குடா செல்லம், நாளேலேந்து நான் கதை சொல்றேன் - தெனாலி ராமன், மரியாதை ராமன், ராமாயணம், மகாபாரதம், நளன் தமயந்தி, விக்ரமாதித்தன், பஞ்ச தந்திரம், நீதி கதைகள், இப்படி நிறைய இருக்கு இதுல இல்லாம சொல்ல தெரியாம எதோ அவர் உளர்றார் - project பத்தி கேளு, மணிகணக்கா பேசுவார் உங்கப்பா மிச்ச எல்லாத்துலயும் சைபர் தான்
1 comment:
இந்த பொம்மனாட்டிகளுக்கே புருஷன் என்றால் இளக்காரம் தான். விடுங்க பாஸ். சண்டைல கிழியாத சட்டை எந்த ஊருல இருக்கு??
நல்ல முயற்சி. நன்று. தொடருங்கள்.
Post a Comment