ஸரஸ்வதி பூஜை
வெள்ளை மலர் போன்ற புடவை. எப்போதும் சிரித்த முகம். எளிமையான தோற்றம்.
எனது வாழ்வில் ஒரு சிலரை கன்டு வியது இருக்கிறேன், இவர்கள் போல இருக்க முடியாதா என்ரு ஏங்கிய சிலரில் ஸரஸ்வதி பாட்டியும் ஒருவர்.
ஸேவைக்காக வாழ்வை அர்பனித்தல் என்பதை வாழ்ந்து காட்டியவர்.
எங்கோ காட்டில், ஸாமியார் கரடில், ஜன நடமாட்டம் முற்றிலும் இல்லா இடத்தில் - இறை தேடுபவர்க்கு இரை கிடைக்க வழி செய்தவர். 59 தீக்குச்சிகள் மட்டும் வைத்து 75 நாட்கள் அடுப்பு எறிக்கும் வித்தை தெரிந்தவர்
பணம் துறந்தவர் மத்தியிலும் தன் ஸொத்து என்று சொல்லக்கூடிய சிறிய தொகையை, கறவை மாடுகள் வாங்க கடன் கொடுத்து வட்டி வாங்கி கண்ணும் கருத்துமாக சேர்த்த பணம் அனைத்தையும் உயிலாக, பிறர்க்கு ஈந்தவர்.
நான் அவரிடம் வாங்கிய திட்டு இன்னும் இனிக்கிறது
"இங்க பாருடீ, காளையாட்டம் தண்ணிய கொட்டாதடான்னா கேக்க மாட்டேங்கறான்"
சிறு வயதில் ஏப்ரல் மே இல், ஸேந்தமங்கலம் செல்வோம். அப்போது குளிக்கும் தண்ணீர் அதிகம் எடுத்ததற்க்கு வாங்கிய திட்டு - "காளை"
என் மகனை மடியில் வாங்கி - "நீயும் இப்படித்தான் இருந்தடா, நவராத்திரியில் உனக்கு ஆயுஷ்ஹோமம் நல்லா நடந்தது" என்று சொன்னது தான் நாங்கள் கடைசியாக பேசியது.
எதோ தொடர்பு இருக்கு - மிச்சவங்க எல்லாம் ஸுலபமா - "வயஸாயிடுச்சு இல்ல" என்று ஸொல்லும்போது, என்னால் ஏற்க
முடியலை.
வாழ்நாள் பூராவும் உன் நினைவு இருக்கும் பாட்டி - அதனால்தானொ என்னவோ, என் பிறந்த நாள் அருகில் நீ சென்றாய்
வெள்ளை மலர் போன்ற புடவை. எப்போதும் சிரித்த முகம். எளிமையான தோற்றம். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
From India Visit |
1 comment:
fitting homage to a great soul...
Post a Comment