Wednesday, November 10, 2010

---கதை---

என் அப்பா அம்மா இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது ; வழக்கம்போல் நேற்று பிஷக் கதை கேட்டான் ; கையில் சுஸ்ருதை வைத்துகொண்டு இருந்தேன் - சரி ரெண்டு பேருக்கும் சேந்து கதை சொல்லலாம் என்று ஆரம்பித்தேன் .

"பிஷக், உனக்கு என்ன கதை வேணும்"
"இன்னக்கி தாத்தா கதை"
சரி - எந்த தாத்தா
உம்மாச்சி ராமரோட தாத்தா கதை சொல்லு
ராமர் கதையே சொல்றேனே (சத்தியமா ராமர் தாத்தா பேரு மறந்து போச்சு - எப்பவோ படிச்ச ரஹுவம்ச மகாகாவ்யம் )
உம்ஹூம் எனக்கு ராமர் தாத்தா கதை தான் வேணும்
நான் மூச்சா போயிட்டு வந்துர்றேன் இரு
ஒருவழியாக கூகுல் புண்ணியத்தில் அஜ சக்ரவர்த்தி விக்கிபீடியா எல்லாம் wifi phone மூலம் கழிவறையில் படித்து விட்டு வந்து அவனுக்கு சொல்லி முடித்தேன் - அவன் தூங்கவில்லை
சும்மா இல்லாமல் "வேற என்ன கதை வேணும்" என்றேன்
"வேற ஏதாவது தாத்தா கதை சொல்லேன்"
என் மனகுதிரையை ஓட விட்டேன்
பிஷக் -
வியாசர் ஒரு வழியிலே பண்டவர்களோட தாத்தாதான் - தன வழிதோன்றல்கள் பத்தி விரிவா எழுதினதுதான் மகாபாரதம்

ராமாயணம் எழுதின வால்மீகி ஒருவழியிலே லவன் குசன் தாத்தா - மாப்பிள்ளை ராமனை பத்தி பெருமையா எழுதினது தான் ராமாயணம்

இப்படியே வியாசர், வால்மீகி கதையெல்லாம் சொல்லி தூங்க வைத்தேன் -

அரை தூக்கத்தில் என் காதில் விழுந்தவை "இப்படிதாம்மா தத்து பித்துன்னு எதையாவது சொல்லி வைக்கறார், குழந்தை ராத்திரியிலே பயத்துல பெட் ஈரம் பண்றான் - நீங்களே கேளுங்க உங்க புள்ளய - என்ன சொன்னாலும் இவனும் அவர்கிட்டதான் கதை கேப்பேன்னு நிக்கறான், எவ்ளோ தரம் சொல்றது, நல்ல கதையா சொல்லுங்கன்னு - சொன்னா கேக்கறதுன்னு பரம்பரையிலேயே இல்லையே"
என் பிரமையாக இருக்கலாம்...

என்ன உங்களுக்கு பிடித்து இருக்கா இல்லையா?

No comments: