Tuesday, March 3, 2009

விரல்

இந்த அஞ்சு விரலும் அஞ்சு மாதிரி யோ(அம்பது மாதிரியோ?)  

சுண்டு விரல் எனக்கு நினைவு தெரிஞ்சு ஒரே ஒரு தரம் கல்யாணத்துல மட்டும் use ஆச்சு - இதுவரைக்கும் ஒரு முறைகூட கல்யாணம் ஆகாதவங்க / புரியாதவங்க / replyto: வச்சு இ-மெயில் எழுதுனா பதிலும் முடிஞ்சா கல்யாண சி டி பதிப்பும் அனுப்பி வைக்கப்படும் ( அப்புறம் எப்பிடிதான் அந்த சி டி யை தள்ளி விடறது?)  
எதுனால இதை போய் "சுண்டும்" விரல் ன்னு சொன்னாங்கன்னு தெரியில - இந்த ஒரு விரலால்தான் ஸூண்ட முடியலன்னு சொல்லிட்டாங்களோ  


அடுத்து வருவது மோதிர விரல், ரெண்டும் கெட்டான் அப்பிடீங்கறது இந்த விரலுக்குதான் பொருந்தும். பெருசும் இல்ல, சின்னதாவும் இல்ல - அதனால தானோ என்னவோ பெரியவங்களே இத ஒரு அழகு பொருளா வச்சிட்டாங்க - வெறும் மோதிரம் மாட்டுற ஸ்டாண்டு மாதிரி - முக்கியமா மோதிரம் அடி படாது - பத்திரமா இருக்கும், அதான் இந்த விரல் தனியா எதுவும் செய்யவே முடியாதே  அண்ணன் நடு விரலார் 
அடுத்து வர்றார் - ஆண்டவன் படைப்பில ஒரு சிறு தவறு - UAT bug - ஒரு வினோதம் - பேரு என்னமோ பாம்பு விரல் - ஆனா இந்த விரலாலே தனியா நெளிய முடியாது - கூட அக்கம் பக்கம் விரல்களும் சேந்து ஆடும்


அதுவாவது பரவா இல்ல; ரொம்ப பெரிய விரலா இருக்கே - இத தனியா தூக்கி காமிக்கலாம் அப்பிடின்னு நெனைச்சா அதுக்கு மேல ஆபத்தா இருக்கு சரி - இத மடக்கி வச்சுக்கலாம் அப்பிடின்ன அது தன்கூட மிச்ச விரலையும் கீழ இழுக்குது  

அடுத்து வருவது ஆள் காட்டி விரல் - பேர் ஒன்றே போதும் - இது என்ன வேலைக்கு லாயக்குன்னு - சின்ன வயசுல ஸ்கூல்ல யார் பேசினாங்கன்னு காமிக்க ஆரமிச்சு, ரகசியமா காலேஜுல போட்டு குடுக்கறதுல இருந்து இந்த விரல் நிச்சயம் நரகத்துக்குதான் போகும்னு நினைக்கிற அளவுக்கு பாவமான விரல்  

கட்டை விரல் - இதுவும் என்னமோ தனக்குதா எல்லாம் அப்பிடிங்கிற மாதிரி மிச்ச விரல விட்டு ஒதுங்கி தனியா நிக்கிது - அதுலயும் எல்லா விரலும் வடக்க பாத்தா இது மட்டும் கொஞ்சம் ஒருகளிச்சு வடமேற்கு பாக்க வேண்டியது - அத ஒழுங்கா நிக்க கூட முடியிலென்ன அப்புறம் எதுக்குதான் ஒத்துமையா இருக்கும்? அதான் இந்த விரல் ரேகை அழியாதுன்னு இத பத்திரத்துல வாங்கி வெச்சுட்டாங்க - இதுலே வேற இந்த விரல் தனிய நிக்கிறப்ப தலை மட்டும் தனியா வானத்த பாத்து வளையும் - தலை கணம் அப்பிடிங்கறது இதுதான் போல  


என்னடா இந்த கையே வேஸ்ட் அப்பிடின்னு நினைக்க வெச்சாலும் (எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை no pun intended) விரல் மட்டும் இல்லன்னா எந்த படைப்புமே இல்ல - கூர்ந்து கவனிச்சா, வியத்தகு செயல்கள் செய்ய ஒன்னோட ஒன்னு இணைந்து செயல் பட்டா மட்டுமே முடியும்னு தெரியுது. (மீண்டும் ஒருமுறை மேல் அடைப்புகுறி வாக்கியத்தை படிக்கவும் - எந்த அரசியல் ...)


கிட்டத்தட்ட இந்த மாதிரித்தான் கருத்து கணிப்புக்கள் சீரிய முறைநோக்கு இல்லாமல் உள்நோக்குடன் உழற்றுகின்றன - அது அரசியல், எகனாமிகள், வேலை என்று எங்கே சென்றாலும் உள் இருத்தி உரைகள் நிறைய உள்ளன  


என்னதான் கை முன்னோக்கி மட்டுமே நகர்ந்தாலும் விரல்கள் பின்னோக்கி நகர்வதால் முழு பயன் பெற முடியுதுன்னு சொல்லி இந்த உரையை இத்துடன் முடித்து விடை பெறுகிறேன் - நன்றி வணக்கம்