Sunday, December 5, 2010

பொக்கிஷம்

சரபோஜி மன்னர் வெகுநேரம் சிந்தனை செய்தார் - இந்த கணக்கு சரியாக இருக்குமா? இன்னும் ஒரே நாள் தான் இருக்கிறது
எதற்கும் சுப்ரமணிய ஐயரை கேட்டு விடலாம் என்று குதிரையில் கிளம்பினார் - தஞ்சையின் தென்கிழக்கு நோக்கி
சூரியனுடன் எதிர் சண்டை செய்வதுபோல் இருந்தது
மன்னர் அடிக்கடி இப்படி கிளம்புவது பழகிப்போனதால் தஞ்சையின் அனைத்து மதில் வாயில்களிலும் தயாராக வேளக்கார படை இருந்தது - சுந்தர வேலன் அரசரை நிழல் போல் தொடர்ந்தான்
கடயூரில் நுழைந்து மேலவலாக தெரு நாலாம் வீட்டில் நின்றது. நிற்கும் முன்னே குதித்து ஓடினார் சரபோஜி
சுந்தரன் படை தளபதிக்கு தகவல் அனுப்பிவிட்டான் - இனி அடுத்த சில நாட்கள் கூட இங்கே இருக்ககூடும் - மன்னரும் ஐயரும் ஜோதிட வல்லுனர்கள் - நேரம் போவதே தெரியாமல் ஆராய்ச்சி நடக்கும் - மன்னருக்கு ஒரே வருத்தம் ஐயர் தஞ்சையில் தங்காததுதான் - ஆனால் சுப்ரமணியரின் ஈர்ப்பு தெரிந்தததால் அடிக்கடி அவரே வருவார். இன்றும் அப்படியே.

அதிசியமாக இருவரும் உடனே கோயிலை நோக்கி விரைந்தனர் - சுந்தரன் தொடர்ந்தான் - அங்கே ஐயர் ஈசன் சந்நிதியில் விரல் சுட்டும் திசை கூர்ந்து பார்த்தனர் - எதோ புரிந்தது போல் இருவரும் விரிந்து அபிராமி சந்நிதியில் தரையில் இருந்த கல்வெட்டை பார்த்தனர்.

அன்று அந்தி நேரத்தில் சரபோஜி மன்னர் முன்னிலையில் அபிராமி பட்டர் தனது அந்தாதி அரங்கேற்றம் செய்தார் - அமாவசை இரவு என்பதால் இருள் கவ்வ ஆரம்பித்தது - அரசர் ஒளி விளக்குகள் ஒன்று இரண்டு தவிர மீதம் எல்லாம் அணைக்க சொல்லிவிட்டார்

விஷயம் தெரிந்து ஆயிரகணக்கான மக்கள் கூடியிருந்தனர் - ஆங்காங்கே ஒலிமகளிர் பட்டர் பாடியதை வாங்கி பாடினர்

....
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே !...

அவர் பாடும்போதே விண்ணில் ஒரு வெளிச்சம் தோன்றுவதை எல்லாரும் பார்த்தனர் - கண்மூடி பரவசமாக இருந்த சரபோஜியும் பட்டரும் விழி விரித்து வியந்து பார்த்தனர் - பதிகம் தொடர்ந்தது

செப்பும் கனக கலசமும் .... சொல்லும்போதே ஒரு கண்ணை பறிக்கும் விண்மீன், அடுத்த சந்திரனோ என்று என்னும் வண்ணம் போட்டு போன்று ஆரம்பித்து அளவில் பெரியதாகி பருத்து வந்தது - சற்று நேரம் கழித்துதான் புரிந்தது அந்த தங்க நிலா இங்குதான் வெகு வேகமாக வருகிறது

மக்களுக்கு குழப்பம் - ஓடுவதா இருப்பதா? கல் போல அமர்ந்து இருக்கும் சரபோஜியும் சுப்ரமணியனும் அவர்களுக்கு ஆறுதல் அளித்தனர்
அடுத்த 22 பதிகங்கள் முடிவதற்கும் அந்த நிலா திடீரென வெட்டு வெட்டி விழுவதற்கும் சரியாக இருந்தது

சரபோஜியும் பட்டரும் அபிராமியை வணங்கி எழுந்தனர் - சுந்தரன் அரசர் சொல்படி ஒரு கதை கிளப்பினான்
அன்றிரவே ஒரு குதிரையும் பல்லக்கும் தரங்கம்பாடி நோக்கி பயணித்தது - பட்டரும் சரபோஜியும் படகில் ஏற பாய்மரம் விழுந்தது
இப்போது அந்தமான் என்று அறியப்படும் இடத்தை அடைந்து பார்வையிட்டனர் - எரி கல் விழுந்த தடம் தெரிந்தது - கடலோரம், விழுந்த அந்த தங்க புதையல் எடுக்கமுடியவில்லை - இதுவும் அபிராமி லீலை என்று திரும்பினர் - இன்றும் அங்கே தங்க கலசம் அப்படியே இருப்பதாகவும் வெளி கிரகத்தில் இருந்து விழுந்த தங்கம் அது என்றும் சொல்கிறார்கள் - அடுத்த முறை அங்கு போனால் பாருங்கள்

பின்குறிப்பு
சரபோஜி வான் ஆராய்ச்சியில் வல்லுநர்
வான வெளியில் இருந்து எறி கல் விழுதல் சாதாரண நிகழ்ச்சி - விழும் கல் எப்போதும் இரும்பாக இருக்க அவசியம் இல்லை - ஏன் தங்கமாக இருக்க கூடாது?
இந்த கலவை கற்பனையில் உதித்த கதை இது - இதில் வரும் தெரு, இலக்கம், கல் வெட்டு, புதையல் அனைத்தும் உண்மை