Friday, June 20, 2014

Fullஆ Halfஆ

ஏண்டீ Fullஆ Halfஆ

ஹும் small, எதுக்கும் கொஞ்சம் யோசிங்க, இவ்ளோ நாள் இல்லாமல் இப்ப என்ன திடீர்னு - மனசுக்குள்ள பெரிய **காரன்னு நெனைப்பு. எனக்கு நம்பிக்கை இல்லை;

எனக்கு இதெல்லாம் சின்ன வயசுலேயே பழக்கம்டீ - எனக்கு பன்னெண்டு 13 வயசு இருக்கும், அப்பத்தான் நாங்க செங்குளம் காலனி போனோம். தீவாளி சமயம், செம demand. ஸ்கூல் வேற லீவ். கட்டிங் எல்லாம் போட்டு இருக்கேன்

இது அண்ணா அப்பாவுக்கு  தெரிஞ்சா   அவங்களுக்கு எப்படி இருக்கும் ?

அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்; அம்மாவுக்கு அரசல் புரசலா தெரியும் - இப்ப இந்த சிவா பய வேற ஏதாவது உளறி இருப்பான் ; சமாளிப்போம்

நமக்கு ஏன் இப்புடி புத்தி போவுது அப்படின்னு நெனைச்சு பாருங்க - அடுத்த வாரம் ஆபீஸ் வேலையா வெளியூர் போகணும்னு வேற சொன்னீங்க - உங்களுக்கு இந்த வயசுல இந்த நேரத்துல இந்த வேலை தேவைதானா?

இங்க வந்ததுலே இருந்து எல்லா வேலையும் வெள்ளைக்காரன் மாதிரி நமக்கு நாமே செஞ்சுக்குறோம் இல்ல - இத மட்டும் ஏன் விட்டு வைக்கணும்

எப்பிடியோ போங்க - ஆனா பத்து மணிக்கு மேல ஒன்னும் சத்தம் கித்தம் வர கூடாது - அப்புறம் தொள்ளாயிரத்து பத்தும் ஒன்னும் கீழ் வீட்டுக்காரன் கூப்பிடுடுவான்

ஆமாண்டி எனக்கும் பயமாத்தான் இருக்கு - இதுவேற கிறுகிறுங்குது - கரெக்டா பத்து மணி வரைக்கும் தச்சுட்டு தையல் மிஷினை ஆப் பண்ணிடலாம். இந்த டிரெஸ்ஸ போட்டு பாரு - மிச்ச பைபிங் நாளைக்கு கலையில்,  வீட்டுல தையல் மிஷின்  வாங்கி வெச்சு  ரொம்ப நாளாச்சு; சரி இவளுக்கு ஒரு சுடிதார் தைக்கலாம்னு உக்காந்தது தப்பா போச்சே !...



இந்த தையல் மிஷினை வாங்கவும் வேண்டாம் இப்பிடி போட்டு என்ன படுத்தவும் வேண்டாம் என்னமோ பண்ணுங்கோ, சுடிதார் ஆனா சூப்பரா இருக்கு