Monday, September 26, 2011

சுக்லாம்பரதரம்

நானே ப்ளாக் எழுதும்போது தானும் எழுத போவதாக சொல்லிய என் நண்பர் ஒருவர் சில நாட்களாக காணோம். சரி ஒரு தொலைபேசி அழைப்பு விடுவோம் வாய்ஸ் மெயில் தான் போகும் என்று நினைத்து அவர் ஆபீஸ் நம்பருக்கு இரவு நேரத்தில் அழைத்தேன் 

ஆயுசு நூறு பாலா - எப்பிடி மூக்கு வேர்த்துது உனக்கு என்றார் - 

    ஒன்னும் புரியலையே சார் , இந்த நேரத்துல ஆபீஸ்ல என்ன பண்றீங்க 

உன் போன் வரும்னுதான் உக்காந்து இருந்தேன்னு நெனக்காத - இப்பதான் எப்பிடியும் ப்ளாக் எழுதனும்னு முடிவோட இங்கேயே உக்காந்துட்டேன் - பேனா பேப்பர் எல்லாம் ரெடி - முத வரி எழுதியதும் தான் பிரச்சனை - நானே உனக்கு கால் பண்ணலாமா வேண்டாமான்னு யோசிக்கும்போது நீயா கூப்பிட்டுட்ட 

   சரி சொல்லுங்க சார் என்ன பிரச்சனை 

அது ஒன்னும் இல்லபா, மொதல்ல பிள்ளயார்கிட்ட இருந்து ஆரமிக்கலமேன்னு சுக்லாம்பரதரம்னு எழுதினேன் 

   சூப்பர் - சரியாத்தானே பண்ணியிரிக்கீங்க - எனக்குதான் அப்பிடி தோணவே இல்ல, blabberings  ஆரமிச்சப்ப பெருமாள்கிட்ட ஸ்டார்ட் பண்ணேன் - எதோ பரவால்ல ஆனா    vquarter    ஆரமிச்சது காலேஜ் தொடரோட - அதுவும் அடிபட்ட கதை - இன்னும் அடி வாங்கிட்டுதான் இருக்கேன் 

நான் சொல்றத கேளுப்பா - அப்புறம் மறந்திடும் - இந்த ஸ்லோகம் எழுதி ஒரு விளக்கம் போட்டு ஆரமிக்கலாம்னு பாத்தா - இதுல எங்கேயுமே பிள்ளையார் பேரே வரலியே - இது பிள்ளையார் ச்லோகம்தானா அப்பிடின்னு சந்தேகமே வந்துடுத்து 

என்ன சார் - இருங்க ஒரு நிமிஷம் என்று டயம் வாங்கிவிட்டு - மனதிற்குள் சொல்லி பார்த்தேன் 
 சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே 
வெள்ளையுடை உடுத்தியவரும், எங்கும் நிறைந்திருப்பவரும் வெள்ளை நிறமானவரும் நான்கு கைகள் உடையவரும் சிரித்த முகமுடயவரை  நினைக்க எல்லா தடைகளும் விலகிடும் 

அட அமாம் சார், சிரிச்ச மூஞ்சிங்கரதுனால வேணா பிள்ளையார்னு வச்சுக்கலாம் மிச்சபடி சேறு கலர் இவர் எங்கே வெல்லுடுப்பு வேந்தர் எங்கே 
  
அட போப்பா இது கிண்டல் பண்ற நேரமில்ல, கத ஆரமிக்கவே இவ்வளவு தடுங்குது நீ வேற 

ஆனாலும் சார் எல்லா இடத்துலயும் இதுதான் பிள்ளையார் ஸ்லோகம்னு போட்டு இருக்கு - நான்கூட விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆரம்பத்துல இதான் சொல்லுவேன் 

எனக்கு தெரியும்டா - என்ன இருந்தாலும் நீயும் பாதி வைஷ்ணவந்தானே .........(எழுத முடியாதஅளவு  திட்டினார் - நான் எப்படி பாதி வைணவன் என்று இன்னும் விளங்காதவர்கள் கீழே கேட்கலாம்)

சார் கோவிச்சுகாதீங்க - என்னமோ சொல்லிட்டேன் - நீங்க திட்டும்போதே விரத கல்ப மஞ்சரி பாத்தேன் - எல்லா பூஜைக்கும் முதல்ல 18,19  பக்கம் பாக்க்கவும்னு எழுதி அதுல இந்த ச்லோகம்தான் ஆரமிக்குது 

டமால் என்று சத்தம் கேட்டது - அது ஆபீஸ் போன் என்று புரியாமல் அவர் விட்டு எறிந்ததில் அருகில் எங்கோ பட்டு ஸ்பைரல் வயர் பவுன்ஸ் ஆகி அவர் மேலேயே மோதியிருக்கும் போல - மீண்டும் கால் பண்ணியும் எடுக்கவில்லை - சரி எப்போ முருங்கை இறங்குவாரோ என்று நினைத்து கொண்டேன் 

இரவு நடுநிசி - கண்ணாடி ஜன்னல் தாண்டி "பாலா" என்று சத்தம் கேட்டு அலறி அடித்து எழுந்து அரைக்கால் நிஜாருடன் படியிறங்கி பாத்தேன் - பலத்த கட்டுடன் நின்று கொண்டு இருந்தார் - காரினுள் அவர் மனைவி ஓட்டுனர் இருக்கையில் இருந்துகொண்டே - நான் சொன்னா எப்ப கேட்டார் இப்படி கத்தாதீங்கோன்ன கேட்காம ஓடுற காரிலேயே இறங்கறேன்னு கால் தடுக்கி இப்ப திரும்பவும்  விழுந்ததுதான் மிச்சம் 

அவரை பாத்தேன் - மனிதனுக்கு பலமான அடிதான் போலும் - என்ன சார் என்ன ஆச்சு 

ஒன்னுமில்லப்பா, எதோ பேச்சு ஞாபகத்துல ஆவேசம் வந்தாப்ல ஆய்டுச்சு, போன் பண்ணலாம்னா பசங்க முழிச்சுன்ட்டா உனக்கு கஷ்டம் - அதான் எமர்ஜென்சி போய் கட்டு போட்டவுடன் இங்க வந்தே சொல்லிட்டு போய்டலாம்னு சொன்னேன் - இவ ஓட்ட தெரியாம ஒட்டி இன்னொரு அடி - பட்ட மண்டியிலே படும்நு ஆயிடுத்து - மூளை கலங்காம இருந்தா சரின்னு நெனைச்சு சந்தொசபடவேண்டியதுதான் 

சார் என்ன ஆச்சு உங்க ப்ளாக் 

போதும்டா சாமி - இனிமே எழுதினா என்னை ......... அடி

வாங்கோ ஒரு காப்பி குடிக்கலாம்  

இல்ல பரவால்லே நானும் போய் தூங்கனும் வரேன்பா , ஆனா ஒன்னு இனிமே பூஜை எல்லாம்  கஜானனம்னு தான் ஆரமிக்கணும் - 

குட் நைட் சார், அவர் போய்ட்டார் 

என் மண்டை குடைய ஆரமித்தது - அப்ப இத்தன நாளும் பிள்ளையார்னு சொல்லி வெள்ளாடை வெண் தோலுடைய நாலு கையனை தான் கூப்பிட்டு நம் தடை தீர்க்க சொல்லி இருக்கோம் - அப்ப தப்பு நம்ம பேர்ல தானோ?

நீங்க என்ன சொல்றீங்க?